குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் வணிக (commercial) விமானங்கள் தொடக்கம்..!!

kuwait resume commercial flights. (image credit : Gulf news)

குவைத்தில் வணிக (commercial) விமானங்கள் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தங்கள் நடவடிக்கைகளை இன்று (ஆகஸ்ட் 1) முதல் மறுதொடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று அதிகாலையில் பல குடிமக்கள் T4 முனையம் வழியாக குவைத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக விமானங்களுக்கான வழிமுறைகளை DGCA வெளியீடு..!!

அதில் பெரும்பாலானோர் லண்டன் நகரத்திற்கு புறப்பட்டுள்ளதாகவும், குவைத் குடிமக்களுக்கு லண்டன் மிகவும் பிடித்த இடமாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனுக்குப் புறப்படும் குடிமக்கள் தங்கள் பயணத்தின் நோக்கம் சுற்றுலாத்துக்காகவும், மற்றவர்கள் தங்கள் வேலைக்குத் திரும்பி வருவதாகவும், மீதமுள்ளவை மருத்துவ சிகிச்சைக்காகவும் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் PCR சோதனை நடத்த கூடுதல் ஆய்வகங்கள்..!!

பயண நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன என்று, குவைத் குடிமக்களுக்கான கூடுதல் தேவைகள் மட்டுமே சுகாதார காப்பீட்டுக் கொள்கை, அத்துடன் பயணத்திற்கு முன் PCR சோதனை வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் குழந்தை விசாவை அம்மாவின் ஸ்பான்சர்ஷிப்பிற்கு மாற்றுவதற்கு தடை..!!

குவைத் விமான நிலையத்திற்கு இன்று கத்தார் மற்றும் துருக்கியிலிருந்து இரண்டு விமானங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms