குவைத்தில் PCR சோதனை நடத்த கூடுதல் ஆய்வகங்கள்..!!

More laboratories to conduct PCR test in Kuwait. (image credit : IIK)

குவைத்தில் கொரோனா வைரஸை (COVID-19) கண்டறியும் PCR சோதனை நடத்த கூடுதல் ஆய்வகங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகார தரங்களின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்த பின்னர், PCR சோதனை நடத்த கூடுதல் தனியார் ஆய்வகங்களுக்கு குவைத் சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குவைத் வருவதற்கு தடை..!!

குவைத்தில் சுகாதார அமைச்சகத்திடம் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்கள் சோதனைக்கான விலையை அறிவித்துள்ளதாக அல் ராய் அரபு செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக விமானங்களுக்கான வழிமுறைகளை DGCA வெளியீடு..!!

அல்-ராய் அரபு செய்தித்தாளின் கூற்றுப்படி, சில அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்கள் சோதனைக்காக 30 முதல் 35 தினார் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சில ஆய்வகங்களில் ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் 27 தினார்களுக்கான பரிசோதனையை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் ஆகஸ்ட் 2 அன்று பொறுப்பேற்பு..!!

குவைத் விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்கான PCR சோதனைக்கு 40 தினார்கள் செலவாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms