Oxford/AstraZeneca தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த குவைத் ஒப்புதல்

Kuwait approves emergency use of Astrazeneca-Oxford COVID-19 vaccine
(Photo: AFP)

குவைத்தின் சுகாதார அமைச்சகம் Oxford/AstraZeneca கோவிட் -19 தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த நேற்று ஒப்புதல் அளித்ததாக KUNA தெரிவித்துள்ளது.

மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு விவகாரங்களுக்கான உதவி துணை செயலாளர் அப்துல்லா அல்-பதர், தடுப்பூசி திட்டத்தை தாமதப்படுத்தாமல் இருக்க, பிரிட்டிஷ் தயாரிக்கும் தடுப்பூசியின் ஆரம்ப தொகுதியைப் பெறுவதில் அமைச்சகம் வெற்றி பெற்றுள்ளது என்றார்.

குவைத்தில் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40 பேருக்கு COVID-19

முதல் தொகுதி வரும் நாட்களில் குவைத் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

வளைகுடா ஒத்துழைப்பு சுகாதார கவுன்சிலிடமிருந்து இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் பெற்றுள்ளதாக என்றும் அப்துல்லா அல்-பதர் கூறினார்.