குவைத் நாடாளுமன்ற அமைச்சரவையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சம்பந்தமாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்..!!

Decision taken in kuwait parliment meeting regarding expats workers. (photo : IIK)

குவைத்தில் ஜூலை 05ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அமைச்சரவையில் வெளிநாட்டு தொழிலார்கள் குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அவை :

  • குவைத்தில் உள்ள வெளிநாட்டை சேர்ந்த 60 வயது முடிந்த அனைத்து தொழிலாளர்களும் நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குவைத் நாட்டில் 15 வருடங்களுக்கு மேல் இருப்பவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இனிவரும் காலங்களில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அடையாள அட்டைகள் மறுபதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குவைத்திற்கு சுற்றுலா விசாவில் வந்தவர்கள் பிறகு தொழிலாளர் விசாவுக்கு மாறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குவைத் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 90,000 தொழிலாளர்களை கண்டுபிடித்து அரசு செலவில் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசுத்துறையில் மருத்துவம் தவிர்த்து அனைத்து துறைகளிலும் உள்ள வெளிநாட்டினரை பணி நீக்கம் செய்யப்பட்டு குவைத் குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • இனிவரும் காலங்களில் இடஒதுக்கீடு முறையில் மட்டுமே ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும், அதன் அடிப்படையில் இந்தியர்களுக்கு 15 சதவீதமும், ஸ்ரீலங்கா, எகிப்து, பிலிப்பைன்ஸ் நாட்டவர்களுக்கு 10 சதவீதமும், பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், வியாட்நாம் நாட்டவருக்கு 03 சதவீதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குவைத் குடிமக்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள வெளிநாட்டினர் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு அவர்களுக்காக ஆறு மாகாணங்களிலும் தனி குடியிருப்புகள் அமைத்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08