குவைத்தில் சுமார் 416 வெளிநாட்டினரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய திட்டம்..!

(Photo: Shutterstock)

சிவில் சேவை அமைப்பின் (Civil Service Bureau) அறிவுறுத்தலின் படி, சுமார் 416 வெளிநாட்டினரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக குவைத்தின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக Al Anba குறிப்பிட்டுள்ளது.

குவைத்மயமாக்கல் இலக்கை அடைய பொதுத்துறை முயற்சிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குவைத்தில் விசா மீறலுக்கான சலுகை காலம் நீட்டிப்பு..!

பொதுத்துறையில் அனைத்து வெளிநாட்டினரையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட 2017 திட்டத்தின் படி, அதனை 100 சதவிகித குவைத் தொழிலாளர் தொகுப்பாக உருவாக்க திட்டமிட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய அனைத்து ஊழியர்களின் பெயர்களும் தயாராக உள்ளதாகவும், ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.