குவைத் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்..!!

Important decisions taken by ministers meeting in kuwait.

குவைத் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் பின்வருமாறு :

1) குவைத்தின் Jleeb Al-Shuyoukh மற்றும் Mahaboula பகுதிகளுக்கு முழுமையான ஊரடங்கு காலவரையின்றி நீடிக்கப்படுவதாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2) தற்போதைய ஊரடங்கு உத்தரவு நேரத்தை மாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை என்று மாற்றி அமைக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய விதிமுறை ரமலான் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3) தற்போதைய அரசு விடுமுறையை மே 28 வரை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, அரசு அலுவலகங்களின் சேவைகள் பெறுவதில் மேலும் தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4) ரமலான் மாதத்தில் மாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரை உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.