குவைத் ஏர்வேஸ் ஆகஸ்ட் 1 முதல் சேவையைத் தொடங்க உள்ளது..!!

Kuwait Airways to begin service from August 1st. (photo : IIK)

குவைத் ஏர்வேஸ் தனது வர்த்தக (commercial) விமானங்களை ஆகஸ்ட் 1 முதல் பல்வேறு இடங்களுக்குத் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் குவைத் ஏர்வேஸின் முன்பதிவு சேனல்களை அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களைப் பின்தொடர்ந்து கூடுதல் தகவல்கள் மற்றும் முன்பதிவு செய்துகொள்ளுமாறு விமான நிறுவனம், தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

முன்னதாக வணிக விமானங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கான உச்சக் குழு குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் புறப்படுதல் மற்றும் வருகைக்கான தேவைகள் குறித்து சுகாதார அமைச்சகத்தின் நெறிமுறைகளை தெரிவித்துள்ளது.

வருகை (Arrival) :

குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் PCR சான்றிதழைப் பெற வேண்டும், அவர்கள் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும், நிறுவன அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தாலும் சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிப்பதற்கான உறுதிப்பாட்டில் அவர்கள் கையெழுத்திட வேண்டும் என்றும், ஒவ்வொரு விமானத்திலும் 10% பயணிகளுக்கு PCR பரிசோதனையும் விமான நிறுவனம் செய்யும். ஏறுவதற்கு முன்பும், வந்தபின்னும் பயணிகளின் வெப்பநிலை சரிபார்க்கப்படும் என்றும், முகமூடிகள் மற்றும் கையுறைகள் அணிவது போன்ற சுகாதாரத் தேவைகளுக்கு இணங்குவது கட்டாயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறப்பாடு (Departure):

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் அங்கீகாரம் பெற்ற சுகாதார ஆய்வகம் அமைக்கப்படும். குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் அவர் பயணம் செய்யும் நாட்டிற்கு தேவைப்பட்டால் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழைப் பெறலாம். இந்த சான்றிதழுக்காக பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், பயணிகளுக்கு சுகாதார சான்றிதழ்களை வழங்குவது குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தரை சேவை நிறுவனங்களின் பொறுப்பாகும். முகமூடிகள் மற்றும் கையுறைகள் அணிவது, சமூக தூரத்தை கடைபிடிப்பது போன்ற சுகாதாரத் தேவைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08