குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக விமானங்களுக்கான வழிமுறைகளை DGCA வெளியீடு..!!

Instructions for Airlines operating at Kuwait International Airport. (image credit : Q8india)

குவைத் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக விமானங்கள் தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

DGCA கூறுகையில், அனைத்து நடவடிக்கைகளும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து வழிமுறைகளையும் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் ஆகஸ்ட் 2 அன்று பொறுப்பேற்பு..!!

மேலும், சுகாதார நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை மீறுவோர்களுக்கு அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிகொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, குவைத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் கொரோனா வைரஸ் (COVID-19) நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் விதமாக PCR சான்றிதழை எடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் பக்ரீத்திற்கு பிறகு வெள்ளிக்கிழமை சந்தை திறக்கப்படும்..!!

சான்றிதழ் செல்லுபடியாகும் சோதனை தேதியிலிருந்து 96 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சான்றிதழ் ஆங்கில மொழியில் இருக்க வேண்டும் என்றும், குவைத் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மூலமாக PCR சான்றிதழ் எடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ DGCA புதிய பயன்பாட்டு (Application) அறிமுகம்..!!

கொரோனா வைரஸ் (COVID-19) தடுப்பு நடவடிக்கைகளான கையுறை அணிதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms