குவைத் அல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைய தற்காலிக தடை

(PHOTO: Ben Smithson/The Points Guy)

இரண்டு வாரங்களுக்கு குவைத் அல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குவைத் குடிமக்கள் அல்லாதவர்கள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு குவைத்துக்குள் நுழைய அனுமதி தற்காலிமாக ரத்து செய்யப்படுவதாக குவைத் தெரிவித்துள்ளது.

வளைகுடா அரபு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவில், நாட்டிற்குள் நுழையும் அனைவருமே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.