31 நாடுகளுக்கு தடை விதித்ததன் எதிரொலி; குவைத் கல்வி அமைச்சகத்திற்கு புதிய நெருக்கடி..!!

Education Ministry faces crisis due to ban on 31 countries. (photo : Arab Times)

குவைத்திற்குள் நுழைவதற்கு 31 நாடுகளுக்கு தடை விதித்ததால் கல்வி அமைச்சகம் தற்போது நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் சில நாடுகள் சேர்ப்பு..!!

அதாவது, இந்த தடையின் காரணத்தால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் குவைத்தில் வேலைசெய்யும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை; வேலையிழக்கும் ஆபத்து..!!

குவைத் 31 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நுழைவதைத் தடைசெய்யும் முடிவின் பின்னர், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆசிரியர்கள் திரும்புவது குறித்து கல்வி அமைச்சகம் ஒரு புதிய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று அல்-ராய் தினசரி தெரிவித்துள்ளது.

இந்த முடிவால் ஏராளமான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் குழந்தை விசாவை அம்மாவின் ஸ்பான்சர்ஷிப்பிற்கு மாற்றுவதற்கு தடை..!!

ஆகையால், சுகாதார அமைச்சகம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஈத் அல்-ஆதா விடுமுறைக்கு பின்னர் உடனடியாக அவர்களை முடிவிலிருந்து விலக்குவதற்கான சாத்தியத்தை அமைச்சகம் பரிசீலிக்கும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms