குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை; வேலையிழக்கும் ஆபத்து..!!

Indian expats suffers of jobless. (image credit : Al jazeera)

குவைத்தில் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குவைத் அரசாங்கம் அதனை ஆகஸ்ட் 1 தேதியன்று மீண்டும் தொடங்க முடிவு செய்தது, அதன்படி இன்று மறுதொடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதக்கிடையில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, இரான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களை தவிர பிற நாட்டினர் குவைத்திற்கு பயணம் செய்யலாம் என ஜூலை 30 வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக விமானங்களுக்கான வழிமுறைகளை DGCA வெளியீடு..!!

இதை அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிர்வாக அளவில் இதற்கு தீர்வு காண முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவலையில் இந்தியர்கள்….

இதையும் படிங்க : குவைத்தில் PCR சோதனை நடத்த கூடுதல் ஆய்வகங்கள்..!!

குவைத் அரசின் இந்த முடிவால் குவைத்தில் பணிபுரியும் இந்தியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

குவைத்தில் இந்தியர்களுக்காக உதவும் குழு ஒன்றின் தலைவரான ராஜ்பால் த்யாகியை அவர்கள் கூறுகையில், இந்த முடிவால், குவைத்திற்கு திரும்பி வர இயலாத ஏராளமான இந்தியர்கள் தங்கள் பணிகளை இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் குழந்தை விசாவை அம்மாவின் ஸ்பான்சர்ஷிப்பிற்கு மாற்றுவதற்கு தடை..!!

மேலும், தங்களின் குவைத்திற்கான விசா முடிவடைகிற நிலையில் உள்ளவர்கள் குவைத்திற்கு திரும்பி வரவில்லை என்றால் அது ரத்தாகும் என்றும், குவைத்தில் தொழில் செய்வதற்கான அனுமதி அவர்களின் விசாவுடன் தொடர்புடையாதக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அவர்களின் விசா ரத்தானால், அவர்கள் குவைத்தில் தொழில் செய்யும் அனுமதியை இழக்கும் நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : BBC

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms