பெய்ரூட் விமான நிலையத்தில் இரண்டு குவைத் உதவி விமானங்கள் தரையிறங்கின..!!

Two Kuwait aid planes land at Beirut airport
Two Kuwait aid planes land at Beirut airport. (image credit : Arab Times)

லெபனான் தலைநகரில் உள்ள ஒரு துறைமுகத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தில் குவைத்திலிருந்து உணவுப் பொருட்களை ஏற்றி வந்த இரண்டு குவைத் விமானப்படை விமானங்கள் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் தூதரகத்தின் பணியாளர்கள் மற்றும் லெபனான் இராணுவத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த உதவி பொருட்களை பெற்றுக்கொண்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மக்கள் மற்றும் அவர்களது வீட்டுத் தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட 31 நாடுகளில் இருந்து குவைத் வர அனுமதி..!!

முதல் விமானத்தின் விமானி கர்னல் ஃபிராஸ் அல்-குலைஃபி அவர்கள் கூறுகையில், துறைமுக குண்டிவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 டன் உணவு மற்றும் மாவு கொண்டு செல்லும் ஆறாவது விமானம் இதுவாகவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டாவது விமான பைலட் தனது விமானம் ஏழாவது விமானம் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 60 டன் மாவு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தின் Al Tayer குழு நாளை முதல் இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவிப்பு..!!

லெபனான் நாட்டின் மத்திய பெய்ரூட் பகுதியின் அருகே உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாகவும் மற்றும் பலர் இந்த சமபவத்தில் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த துறைமுக குண்டுவெடிப்பு சம்பவத்தால் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜஹ்ரா சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து..!!

இந்த துறைமுக குண்டுவெடிப்பு சம்பவத்தால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை குறைப்பதற்கும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் குவைத் இந்த உணவு பொருட்களை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms