குவைத் மக்கள் மற்றும் அவர்களது வீட்டுத் தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட 31 நாடுகளில் இருந்து குவைத் வர அனுமதி..!!

Kuwaitis and his domestic workers are allowed to enter from 31 countries. (image credit : IIK)

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாகம் ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் குவைத் அல்லாத குடிமக்கள், குவைத் குடிமகனின் முதல் பட்ட உறவு (first degree relation) கொண்டவர்களாக இருந்தால் தடைசெய்யப்பட்ட 31 நாடுகளில் இருந்து நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜஹ்ரா சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து..!!

தடைக்கு உட்பட்ட நாடுகள் பின்வருமாறு: இந்தியா, ஈரான், சீனா, பிரேசில், கொலம்பியா, ஆர்மீனியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், சிரியா, ஸ்பெயின், சிங்கப்பூர், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, இலங்கை, நேபாளம், ஈராக், மெக்சிகோ, இந்தோனேசியா, சிலி , பாகிஸ்தான், எகிப்து, லெபனான், ஹாங்காங், இத்தாலி, வடக்கு மாசிடோனியா, மால்டோவா, பனாமா, பெரு, செர்பியா, மாண்டினீக்ரோ, டொமினிகன் குடியரசு மற்றும் கொசோவ் ஆகிய நாடுகளாகும்.

இதையும் படிங்க : தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து குவைத் திரும்ப வெளிநாட்டினருக்கான பயணப் தொகுப்புகள்..!!

நிர்வாக இயக்குநர் யூசுப் அல் பாவ்சன் கூறுகையில், தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியல் தொடர்பாக “02/08/2020” அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எண் 88/2020 ஐத் தவிர, குவைத் குடிமகனுடன் முதல் பட்டம் உறவு கொண்ட குவைத் அல்லாத பயணிகளும் குவைத் வர அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : இந்த டயர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் – குவைத் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் எச்சரிக்கை !!

அதாவது தந்தை, தாய், கணவன், மனைவி, குழந்தைகள், மற்றும் வீட்டுப் பணியாளரின் குடியிருப்பு செல்லுபடியாகும் தன்மைக்கு உட்பட்டு, ஸ்பான்சருடன் வரும் வீட்டுப் பணியாளர்கள் இந்த 31 நாடுகளில் இருந்து குவைத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதாக அவர் தெரிவித்தார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms