குவைத்தின் Al Tayer குழு நாளை முதல் இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவிப்பு..!!

Al Tayer group announce the resumption of flights to India from Tuesday. (image credit : IIK)

குவைத்தின் AL Tayer குழுமமும் மற்றும் Luxury டரவெல்ஸ் இணைந்து ஆகஸ்ட் 11 முதல் இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த Al Tayer குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பஹத் அல் பேக்கர் அவர்கள் கூறுகையில், ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை முதல் இந்தியாவுக்கான எங்கள் சிறப்பு விமானங்கள் மீண்டும் தொடங்கும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தின் ஜஹ்ரா சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து..!!

மேலும், ஆரம்ப திட்டமாக, நாங்கள் டெல்லி, விஜயவாடா, சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொச்சின் ஆகிய நாடுகளுக்கு எங்கள் விமானங்களை திட்டமிட்டுருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மேல்குறிப்பிட்டுள்ள இந்த இடங்களுக்கு குவைத் ஏர்வேஸ் விமானங்களை இயக்கவுள்ளதாக குழுமம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து குவைத் திரும்ப வெளிநாட்டினருக்கான பயணப் தொகுப்புகள்..!!

இந்தியாவுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு PCR சோதனை வசதியையும் அல்பேக்கர் குழு கொண்டு வந்துள்ளது என்றும், PCR சான்றிதழ் கொண்ட டெல்லி பயணிகளுக்கு, டெல்லியை அடைவதற்கு நிறுவன தனிமைப்படுத்தல் தேவையில்லை. பி.சி.ஆர் சான்றிதழுடன், டெல்லியில் இருந்து எந்தவொரு இணைப்பு விமானங்களையும் ஒரே நாளில் எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்த டயர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் – குவைத் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் எச்சரிக்கை !!

டிக்கெட் முன்பதிவு மற்றும் பிற விவரங்களுக்கு, பொதுமக்கள் எங்கள் குழு உறுப்பினர்களான வசீம் – 99696767, யாசர் – 67041981, சலீம் – 97122364, யூசுப் – 96677516, அதுல் – 97313355, பிலால் – 99557046, லினெட் – 99691151 ஐ தொடர்பு கொள்ளலாம் என்று திரு பாபி அவர்கள் தெரிவித்தார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms