குவைத் விமான நிலைய கட்டிடத்திற்குள் பயணிகளை தவிர யாருக்கும் அனுமதி இல்லை – DGCA

Only passengers allowed to enter the airport building
Only passengers allowed to enter the airport building. (image credit : IIK)

குவைத் விமான நிலைய கட்டிடத்திற்குள் பயணிகளை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று DGCA தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் விமான நிலைய கட்டிடத்திற்குள் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பயணிகளுடன் வரும் நபர்கள் பயணிகளை விடுவதற்கோ அல்லது அழைத்து செல்வதற்கோ விமான நிலைய கட்டிடத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் ஜெனரல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

இது குறித்து DGCA தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், இந்த முடிவு விமான நிலைய கட்டிடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காகவும், கட்டிடத்திற்குள் கூட்டம் வருவதைத் தவிர்ப்பதர்காகவும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

குவைத்தில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பும் திட்டத்தின் நான்காம் கட்டம் அமலில் உள்ளது, மேலும் இதில் ஐந்தாம் கட்டத்தில் தளர்வுபடுத்த இருந்த சில வணிக நடவடிக்கைகள் நான்காம் கட்டத்திலே சுகாதார நடைமுறைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குவைத் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறு குவைத் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms