குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

1,183 jobs of expats in Government sector on hold.
1,183 jobs of expats in Government sector on hold. (image credit : Arab Times)

குவைத்தில் 48 அரசு நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 1183 வெளிநாட்டவர்களின் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை முடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குவைத்மயமாக்கல் கொள்கை காரணமாக ரத்து செய்யத் தயாராகி வருவதாகவும் ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.

முதலில், 15 அமைச்சகங்களில் முடக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 626 வேலைககளை எட்டியது, இதில் அதிகபட்சமாக மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகத்தில் இருந்து 130 ஒப்பந்தங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த படியாக 123 ஒப்பந்தங்களுடன் சுகாதார அமைச்சகமும் பின்னர், 101 ஒப்பந்தங்களுடன் கல்வி அமைச்சகம் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!

84 ஒப்பந்தங்களுடன் நீதி அமைச்சகம், 70 ஒப்பந்தங்களுடன் உள்துறை அமைச்சகம், 48 ஒப்பந்தங்களுடன் அவ்காஃப், மற்றும் 33 ஒப்பந்தங்களுடன் தொடர்பு அமைச்சகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சகத்தில் 15 ஒப்பந்தங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிதி அமைச்சகத்தில் 7 ஒப்பந்தங்கள், உயர்கல்வி மற்றும் சமூக விவகார அமைச்சகத்தில் தலா 4, திட்டமிடல் அமைச்சகத்தில் 3 மற்றும் வர்த்தக அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சில் தலா ௧ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சட்டமன்றத்தில் 20, தணிக்கை பணியகத்தில் 16, தேசிய கலாச்சார கலை மற்றும் இலக்கிய கவுன்சிலில் 6, மத்திய புள்ளிவிவர பணியகம் மற்றும் தேசிய காவலில் தலா 2 மற்றும் எண்டோவ்மென்ட் பொதுச் செயலகத்தில் தலா 1 மற்றும் 49 அரசுத் துறையில் 49 ஒப்பந்தங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!

குவைத் பல்கலைக்கழகத்தில் 260, குவைத் நகராட்சியில் 65, சிவில் தகவல் 21, வேளாண்மை மற்றும் மீன்வளத்துறை 18, உணவில் 12, அப்ளைடு 10, விளையாட்டு 9, முதலீட்டில் 7, சுற்றுச்சூழலில் 6 உட்பட 429 வேலைகளை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புக்கு 5, புனித குர்ஆன் குழுவில் 4, ஊனமுற்ற விவகாரங்களில் 3, தலா 2 இளைஞர் விவகாரங்கள் மற்றும் நிதி புலனாய்வு அமைச்சகத்தில், தலா 1 மனிதவள அமைச்சகம் மற்றும் சிறுபான்மையினர் விவகார பொது ஆணையம், கூடுதலாக 8 வேலைகளில் 79 வேலைகளை முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms