COVID-19 சோதனை முடிவுகள் குறித்து பரவிய தகவல் வதந்தி – MOH

Ministry denies rumors coronavirus test results were sent to people who didn’t take such tests
Ministry denies rumors coronavirus test results were sent to people who didn’t take such tests. (Image credit : IIK)

குவைத்தில் கொரோனா வைரஸ் (COVID-19) பறிசோதனை செய்யாத சிலருக்கு சோதனை முடிவுகள் வெளியிட்டதாக தகவல் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி முற்றிலுமாக வதந்தி என்றும், யாருக்கும் இவ்வாறு சோதனை முடிவுகள் அனுப்பவில்லை என்று சுகாதார அமைச்சகம் மருத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

மேலும், எந்தவொரு தகவலையும் பரப்புவதற்கு முன்னர், அந்த தகவல் அதிகாரப்பூர்வமான செய்தியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சகம் எடுத்துரைத்துள்ளது.

சோதனை முடிவுகள் வெளியீடுவது தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகள் மிகவும் கடுமையானவை என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

இது போன்ற சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவதற்கும் அனுப்புவதற்கும் முன்னர் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், தகவல்கள் அனைத்தும் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தலத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அதனை பின்தொடர்ந்து சரியான தகவலை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms3