அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

Kuwait ranks 6th in road quality
Kuwait ranks 6th in road quality. (image credit : WSP)

குவைத் சாலைகளின் தரத்தில் அரபு நாடுகளில் 6 வது இடத்திற்கு உயந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் முன்னதாக 2018 ஆம் ஆண்டில் அரபு நாடுகளில் சாலை தரத்தில் 11 வது இடத்தில் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

தற்போது, குவைத் 11 வது இடத்திலிருந்து முன்னேறி 2020 ஆம் ஆண்டில் அரபு நாடுகளில் சாலை தரக் குறியீட்டில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியதாக சாலைகள் மற்றும் போக்குவரத்துக்கான பொது ஆணையம் வெளிப்படுத்தியது என்று அல்-ஷாஹித் தினசரி தெரிவித்துள்ளது.

மேலும், புதிய சாலைகள், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 2022 ஆம் ஆண்டில் குவைத் அரபு நாடுகளின் சாலை தரக் குறியீட்டில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரம் வெளிப்படுத்தியது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கூடுதலாக, குவைத்தின் ஜஹ்ரா பகுதியின் சாலை மேம்பாட்டு திட்டம் குவைத்தின் மிகப்பெரிய திட்டமாகும் என்றும், இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது என்று அதிகாரம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய மல்டி-ரோல் திட்டங்களில் ஒன்றாகும் என்றும், குவைத்தின் உள்கட்டமைப்பின் வளர்ச்சியைப் பொறுத்தவரை மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய திட்டமாக இது அமைந்துள்ளது என்றும் அதிகாரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms