குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

Manpower Authority prepares list of 68,318 expats above 60 years
Manpower Authority prepares list of 68,318 expats above 60 years. (image credit : IIK)

குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள வயதுடையவர்களின் வேலை அனுமதி புதுப்பித்தலை நிறுத்தும் முடிவை அமல்படுத்த அவர்களின் பட்டியலை தயாரிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் மனிதவளத்திற்கான பொது ஆணையம், வேலை அனுமதி புதுப்பித்தலை நிறுத்தும் முடிவை அமல்படுத்த பல்கலைக்கழக பட்டம் இல்லாமல் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை எட்டிய அனைவரின் பட்டியலை தயாரிக்கத் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

அல் ராய் அரபு தினசரியின் அறிக்கையின்படி, இந்த பிரிவில் உள்ள மொத்த வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 68,318 ஆகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் ஐம்பத்தொன்பது வயதை எட்டிய வெளிநாட்டு தொழிலாளியின் வேலை அனுமதி காலாவதியாகியிருந்தால், மேலும் ஒரு வருடத்திற்க்கு மட்டுமே வேலை அனுமதியை புதுப்பிக்க முடியும் என்று தினசரி செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மேலும், அடுத்த ஆண்டுக்குள் மேற்குறிய பிரிவில் உள்ளவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தயாராக தொழிலாளிக்கு அவகாசம் அளிப்பதே இதன் குறிக்கோள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக பட்டம் இல்லாமல் 60 வயது அல்லது அதற்கு மேல் உள்ள வயதுடையவர்களின் தரவுகளை (Data) தயார் செய்து, அவர்களின் வேலை அனுமதியை புதுப்பித்தல் செய்யவதை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms