குவைத்தில் விசிட் விசாவிலிருந்து பேமிலி விசாவிற்கு மாற தடை..!!

Changing visit visa to family visa is banned in kuwait
Changing visit visa to family visa is banned in kuwait. (image credit : times Kuwait)

குவைத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பின்னர், விசிட் விசாக்களின் கீழ் நாட்டிற்கு வந்தவர்களுக்கு விசிட் விசாவை பேமிலி விசவாக மாற்றுவதை ஏற்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விசிட் விசாவின் கீழ் உள்ளவர்கள் சட்டப்பூர்வ சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இந்த மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று செய்தி தெரிவிக்கப்பட்டுருந்தது.

இதையும் படிங்க : அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் குவைத் அமீரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்..!!

மேலும், விமான நிலையத்தின் பூட்டுதல் மற்றும் மூடல் காரணமாக அதிகாரிகள் விசிட் விசாக்களின் காலாவதியை ஆகஸ்ட் 31 இறுதி வரை நீடித்து அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த விசாக்கள் மேலும் நீட்டிக்கப்படாது மற்றும் பேமிலி விசவாகவும் மாற்ற முடியாது என்று ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து 311 இந்தியர்களுடன் சென்னை வந்தடைந்தது குவைத் ஏர்வேஸ் விமானம்..!!

இந்த செய்தி குறித்து முன்னதாக நம் பக்கத்தில் வெளிவந்த தொடர்புடை செய்தி : குவைத்தில் விசிட் விசாவில் உள்ளவர்கள் மற்றும் குடியிருப்பு புதிப்பிக்காமல் இருப்பவர்களின் கவனத்திற்கு..!!

இதையும் படிங்க : 31 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms