குவைத்திலிருந்து 311 இந்தியர்களுடன் சென்னை வந்தடைந்தது குவைத் ஏர்வேஸ் விமானம்..!!

Kuwait Airways flight to Chennai carries 311 passengers
Kuwait Airways flight to Chennai carries 311 passengers. (image credit : IIK)

குவைத்திலிருந்து சென்னை செல்லும் குவைத் ஏர்வேஸ் விமானம் நேற்று (ஆகஸ்ட் 17) 311 இந்தியர்களுடன் குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவையானது கொரோனா வைரஸ் காரணமாக பல வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட பின்னர், இந்தியாவிற்கு இயக்கிய முதல் விமானமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வந்தே பாரத் 5 : குவைத்திலிருந்து இந்தியாவிற்கு 45 விமானங்களை அறிவித்துள்ளது இண்டிகோ நிறுவனம்..!!

இந்த KU 1343 விமானம் குவைத் விமான நிலைய முனையம் 4 இலிருந்து காலை 08:42 மணிக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சென்னைக்கான விமானம் அல் டையர் குழு மற்றும் சொகுசு (luxury) டிராவல்ஸ் நிறுவனம் சார்பாக இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், இந்த குழு டெல்லிக்கு ஒரு விமானத்தை இயக்கியது, மேலும் அவர்கள் ஹைதராபாத், டெல்லி, சென்னை, மும்பை, கொச்சி, திருவனந்தபுரம், பாட்னா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு அதிக விமானங்களை வரவிருக்கும் நாட்களில் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வந்தே பாரத் கட்டம் 5 : நாளை முதல் தமிழகம் உட்பட பல்வேறு இடங்களுக்கு குவைத்திலிருந்து 33 கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!!

அல் டையர் மற்றும் சொகுசு பயணங்கள் ஒரு பயணிகளுக்கு 23 கிலோ என்ற எடையில் மூன்று பைகளை (bags) எடுத்துவர அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து சேவையை மறுதொடக்கம் செய்ய முடிவு; கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms