31 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!!

Ban on people from 31 countries to continue
Ban on people from 31 countries to continue. (image credit : IIK)

Covid-19 தொற்றுநோயால் குவைத்திற்குள் நுழைவதற்கு 31 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர குவைத் அமைச்சரவை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, உள்ளூர் மற்றும் சர்வதேச சுகாதார அடிப்படையில் இந்த 31 நாடுகளுக்கான தடையை தொடர சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வந்தே பாரத் 5 : குவைத்திலிருந்து இந்தியாவிற்கு 45 விமானங்களை அறிவித்துள்ளது இண்டிகோ நிறுவனம்..!!

ஏனென்றால், தடை விதிக்கப்பட்டுள்ள இந்த 31 நாடுகளிலும் கொரோனா தொற்றுநோய் பரவுவது தொடர்கிறது என்றும் அந்த நாடுகளில் குறையவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்ட ஹோட்டல்களில் நிறுவன தனிமைப்படுத்தலை அமல்படுத்துவதன் மூலம் குவைத் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்று முன்னர் செய்திகள் வந்தது, ஆனால் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தடையை தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வந்தே பாரத் கட்டம் 5 : நாளை முதல் தமிழகம் உட்பட பல்வேறு இடங்களுக்கு குவைத்திலிருந்து 33 கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!!

தடைக்கு உட்பட்ட நாடுகள் பின்வருமாறு: இந்தியா, ஈரான், சீனா, பிரேசில், கொலம்பியா, ஆர்மீனியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், சிரியா, ஸ்பெயின், சிங்கப்பூர், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, இலங்கை, நேபாளம், ஈராக், மெக்சிகோ, இந்தோனேசியா, சிலி , பாகிஸ்தான், எகிப்து, லெபனான், ஹாங்காங், இத்தாலி, வடக்கு மாசிடோனியா, மால்டோவா, பனாமா, பெரு, செர்பியா, மாண்டினீக்ரோ, டொமினிகன் குடியரசு மற்றும் கொசோவ் ஆகிய நாடுகளாகும்.

இதையும் படிங்க : குவைத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து சேவையை மறுதொடக்கம் செய்ய முடிவு; கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms