குவைத்தில் விசிட் விசாவில் உள்ளவர்கள் மற்றும் குடியிருப்பு புதிப்பிக்காமல் இருப்பவர்களின் கவனத்திற்கு..!!

People on visit visa must leave the country before the end of this month
People on visit visa must leave the country before the end of this month. (image credit : IIK)

குவைத்தில் ஆகஸ்ட் 31க்குப் பிறகு நாட்டில் வெளிநாட்டினருக்கான குடியிருப்பு மற்றும் நுழைவு விசாக்களுக்கான தானியங்கி நீட்டிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, முன்னதாக உள்துறை அமைச்சர் COVID 19 தொற்றுநோய் காரணமாக அனைத்து விசாக்களின் காலாவதி தேதியை ஆகஸ்ட் 31 வரை நீடித்து அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!

ஆதாரங்களின்படி, இந்த உள்துறை அமைச்சர் அறிவித்த விசாக்களின் காலாவதியை நீட்டிப்பு முடிவின் மூலம் சுமார் 400,000 குடியிருப்பாளர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களில் சுமார் 260,000 பேர் உள்துறை அமைச்சக வலைத்தளத்தின் மூலம் தங்களது குடியிருப்பை புதுப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!

அதே நேரத்தில், சுமார் 145,000 பேர் தங்களது குடியிருப்பை புதுப்பிக்கவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதிக்குள் குடியிருப்பை புதுப்பிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் மீறுபவர்களாகக் கருதப்படுவார்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என்று அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குவைத்தில் விசிட் விசாவில் உள்ளவர்கள் இந்த மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms