குவைத்திற்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் ஆகஸ்ட் 2 அன்று பொறுப்பேற்பு..!!

C.P. George to be an Ambassador of kuwait.

குவைத்துக்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்துக்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) அன்று பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ DGCA புதிய பயன்பாட்டு (Application) அறிமுகம்..!!

இந்தியாவை சேர்த்த கேரளா மாநிலம் கோட்டயம் பாலா பகுதியைச் சேர்ந்தவர் சி.பி. ஜார்ஜ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியுறவு சேவையில் 1993 முதல் பணியாற்றி வரும் இவர் , 2017 முதல் சுவிட்சர்லாந்து இந்திய தூதராக சேவை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் சிறை..!!

முன்னதாக சவுதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் இவர் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சி.பி.ஜார்ஜ் அவர்கள் அரபு மொழியில் சரளமாக பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் ஷாப்பிங் மால்களின் வேலை நேரங்கள் இன்று முதல் மாற்றம்..!!

குவைத்திற்கான இந்திய தூதராக தற்போது ஜீவா சாகர் அவர்கள் இருந்து வருகிறார், இவர் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி முதல் பொறுப்பில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாகர் அவர்கள் மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms