வந்தே பாரத் கட்டம் 5 : நாளை முதல் தமிழகம் உட்பட பல்வேறு இடங்களுக்கு குவைத்திலிருந்து 33 கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!!

33 additional flights from Kuwait from tomorrow in Vande Bharat phase 5
33 additional flights from Kuwait from tomorrow in Vande Bharat phase 5. (image credit : IIK)

குவைத்திலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வர மேலும் 33 விமானங்களை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்காக வந்தே பாரத் மிஷனின் 5 ஆம் கட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை தொடங்கி இந்த மாதம் 31 ஆம் தேதி வரை குவைத்திலிருந்து மேலும் 33 விமானங்களின் அட்டவணையை வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த அனைத்து விமானங்களை ஏர் இந்தியா விமான நிறுவனம் இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!

அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, மும்பை, டெல்லி மற்றும் ஹைதராபாத்திற்கு ஆறு சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து விமானங்கள் சென்னை மற்றும் பெங்களூருக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு விமான சேவைகள் விஜயவாடாவுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும், கொச்சிக்கு ஒரே ஒரு விமானம் மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!

வந்தே பாரத் திட்டத்தின் 5 ஆம் கட்டத்தில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள விமானங்களின் அட்டவணை பின்வருவமாறு :

24-Aug-20 – 20:25 – சென்னை – AI 1966

27-Aug-20 – 20:25 – சென்னை – AI 1966

28-Aug-20 – 20:25 – சென்னை – AI 1966

30-Aug-20 – 20:25 – சென்னை – AI 1966

31-Aug-20 – 20:25 – சென்னை – AI 1966

இது தவிர, இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பல chatered விமானங்களும் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms