குவைத் அவ்காஃப் செயலகம் சார்பாக லெபனான் மக்களுக்கு 1 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் வழங்க முடிவு..!!

Awqaf to contribute USD 1 mln for Lebanon. (image credit : Arab Times)

குவைத் அவ்காஃப் செயலக ஜெனரல் சார்பாக லெபனான் மக்களுக்கு 1 மில்லியன் அமெரிக்கா டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

லெபனான் மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பொருட்களை வழங்குவதற்காக குவைத் அவ்காஃப் செயலக ஜெனரல் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க உள்ளதாக அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சர் Dr. பஹத் அல்-அஃபாசி அவர்கள் நேற்று (ஆகஸ்ட் 7) வெள்ளிக்கிழமை அன்று அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டவர்கள் குவைத் திரும்ப மூன்று கட்டங்களாக அனுமதிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை..!!

அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்ச அல்-அஃபாசி அவர்கள் குவைத் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இந்த நன்கொடை அவரது உயர்நிலை துணை அமீர் மற்றும் மகுட இளவரசர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்சாபா மற்றும் பிரதமர் ஷேக் சபா கலீத் அல்-ஹமாத் அல்-சபா ஆகியோரின் அறிவுறுத்தல்களால் பெய்ரூட்ஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பிற்கு நிவாரணமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து ஒரு நாளைக்கு 1,000 இந்தியர்களை தாயகம் கொண்டுவர ஒப்புதல்..!!

பல இஸ்லாமிய சமூகங்களோடு சேர்ந்து பாதிப்புக்குள்ளான மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கை கொடுப்பதே இந்த அமைச்சகத்தின் முக்கிய பங்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் மார்ச் 13க்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து..!!

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய இறைவனிடம் பிராத்திப்பதாகவும் அல்-அஃபாசி அவர்கள் தெரிவித்தார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms