குவைத்தில் மார்ச் 13க்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து..!!

All Visas issued before March 13 stands cancelled. (images credit : IIK)

குவைத்தில் மார்ச் 13க்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வகையான விசாக்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவற்றைப் பெறுபவர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப புதிய நடைமுறைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மற்றும் இந்தியாவிற்கு இடையில் தற்காலிக விமான சேவை விரைவில்..!!

அல் கபாஸ் அரபு செய்தித்தாளின் படி, உள்துறை அமைச்சகம் நாட்டிற்கு வெளியே உள்ளவர்களுக்கு மார்ச் 13க்கு முன்னர் வழங்கப்பட்ட விசாக்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து அதன் சட்டபூர்வமான கருத்தை தெரிவித்தது.

மேலும், அவர்கள் தங்கள் நாடுகளில் அனைத்து நடைமுறைகளையும் முடித்திருந்தாலும் குவைத்துக்குள் நுழைய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பெய்ரூட் துறைமுக குண்டுவெடிப்பு : லெபனானுக்கு அவசர மருத்துவ தேவைகளை வழங்க குவைத் முடிவு…!!

உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையை சமர்பித்துள்ளதாகவும், அதன் விசாக்களின் காலாவதி காரணமாக அனைத்து வகையான விசாக்களும் சட்டத்தால் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் குடும்பம், சுற்றுலா, வணிக மற்றும் அரசு வருகைகள் என அனைத்து வகையான விசாக்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் COVID-19 சோதனை மாதிரிகளை சேகரிக்கும் போலி குழு; ஜாக்கிரதை..!!

இருப்பினும், மீண்டும் விண்ணப்பிக்க ஒரு புதிய வழிமுறையை அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள் என்று தினசரி மேலும் தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms