வெளிநாட்டவர்கள் குவைத் திரும்ப மூன்று கட்டங்களாக அனுமதிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை..!!

Three stage plan proposed for expats return to Kuwait. (image credit : IIK)

குவைத்திற்கு வெளிநாட்டவர்களை திரும்ப மூன்று கட்டங்களாக அனுமதிக்க உள்துறை அமைச்சகம் தனது பரிந்துரையை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் PAM துறைகளில் பணியாற்றும் தொழிலார்களுக்கு COVID-19 நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..!!

முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், நீதிபதிகள், அரசு வக்கீல் அலுவலக உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களை மீண்டும் அழைத்து வர பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எத்தனை நபர்களை அழைத்து வர வேண்டும் என்ற எண்ணிக்கை குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து ஒரு நாளைக்கு 1,000 இந்தியர்களை தாயகம் கொண்டுவர ஒப்புதல்..!!

இரண்டாவது கட்டத்தில், குவைத்தில் வசிக்கும் குடும்பங்கள் உள்ளவர்கள், மற்றும் குடும்ப விசாவில் உள்ளவர்கள், அல்லது 18வது பிரிவின் கீழ் குடியிருப்பு அனுமதி பெற்ற குடும்பங்களின் தலைவர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் ஆகியோரை அழைத்து வர பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டமாக, குவைத் வர விரும்பமுள்ள மீதமுள்ள வெளிநாட்டவர்களை நாட்டிற்கு திரும்ப அனுமதிக்கப்படும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் மார்ச் 13க்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து..!!

ஆதாரங்களின்படி, இது உள்துறை அமைச்சகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை மட்டுமே என்றும், இதை செயல்படுத்த சுகாதார அமைச்சகம் மற்றும் பிற அமைப்புகளின் மேலதிக ஒப்புதல்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms