குவைத் தகவல் அமைச்சகத்திலிருந்து 23 வெளிநாட்டு ஊழியர்கள் பணிநீக்கம்..!!

23 expats lose jobs at Information Ministry. (image credit : Arab Times)

குவைத்தில் செய்தி மற்றும் தொலைக்காட்சி துறையில் பணிபுரியும் 23 வெளிநாட்டு ஊழியர்களின் சேவைகளை தகவல் அமைச்சகம் (MoI) நிறுத்தியதாக உள்ளூர் நாளிதழ் செய்தியில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த 23 ஊழியர்கள் முதல் பகுதி என்றும், மற்றொரு பகுதியாக சில வெளிநாட்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டவர்கள் குவைத் திரும்ப மூன்று கட்டங்களாக அனுமதிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை..!!

பணிநீக்கம் செய்யப்படும் வெளிநாட்டவர்கள், தங்களின் குடியிருப்பை நிறுவனத்தின் தனியார் துறைக்கு மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், மாறாக அவர்களுக்கு ஒரு சலுகை காலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் மயமாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாக அமைச்சரவை மற்றும் CSC-யின் அறிவுறுத்தல்களின்படி, குவைத்துகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், முடிந்தவரை வெளிநாட்டவர்களை பணிநீக்கம் செய்யவும் அரசு நிறுவனங்கள் செயல்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து ஒரு நாளைக்கு 1,000 இந்தியர்களை தாயகம் கொண்டுவர ஒப்புதல்..!!

குவைத் பிரதம மந்திரி ஷேக் சபா அல் காலித் அல் சபா அவர்கள் ஜூன் மாதத்தில், நாட்டில் உள்ள மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்காக நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களை அவர்களின் மொத்த மக்கள்தொகையில் 70 சதவீதம் குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், COVID-19 நெருக்கடியின் தாக்கத்தை பொருளாதாரம் குறைந்துள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் மார்ச் 13க்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து..!!

குவைத்தின் 4.8 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.4 மில்லியன் வெளிநாட்டினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms