சுமார் 118 வெளிநாட்டவர்களை பணிநீக்கம் செய்யவுள்ள குவைத்!

Kuwait expats sacked
(Shutterstock)

பல்வேறு துறைகளில் பணிபுரியும் 118 வெளிநாட்டினரின் ஒப்பந்தங்களை நிறுத்த மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம் தயாராகி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான திட்டம் குவைத்மயமாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவைத்தில் அனைத்து குடிமக்கள், வெளிநாட்டினருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்!

இது பொதுத்துறையில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டினரையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனால் அரசு ஊழியர்களில் 100 சதவீதம் பேர் குவைத் நாட்டினர் மாற்றுவது நோக்கம்.

இந்த 118 வெளிநாட்டவர்களில், 59 பேர் தங்களின் 30 ஆண்டுகள் சேவை காலத்தை தாண்டிவிட்டதாக தகவல் ஆதாரங்கள் அல் ராயிடம் தெரிவித்துள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய ஊழியர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-2021 நிதியாண்டில், பல்வேறு அரசு நிறுவனங்கள் முழுவதும், 626 வெளிநாட்டினரின்
ஒப்பந்தங்களை நிறுத்துமாறு சிவில் சர்வீஸ் கமிஷன் (CSC) கோரியுள்ளது, அவர்களில் 118 பேரும் அடங்குவர்.

குவைத் வருகை விசா கால அளவை குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டிக்கும்!

வீட்டுப் பணியாளர்கள் குவைத் திரும்ப அனுமதி – தனிமைக்கான கட்டணம் அறிவிப்பு!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter