வீட்டுப் பணியாளர்கள் குவைத் திரும்ப அனுமதி – தனிமைக்கான கட்டணம் அறிவிப்பு!

Domestic workers return Kuwait
(Photo: Gulf News)

வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல் வீட்டுப் பணியாளர்கள் குவைத் திரும்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை வாராந்திர திங்கட்கிழமை கூட்டத்திற்குப் பிறகு, அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரெக் அல் மஸ்ரெம் (Tareq Al Mazrem) இதனை அறிவித்துள்ளார்.

இந்த மாதம் குவைத்தில் இருந்து இந்தியா செல்லும் ஒரு வழி விமானங்களின் முன்பதிவு!

தனிமைப்படுத்தலின் கட்டணம் விமான கட்டணத்தை சேர்க்காமல் 270 குவைத் தினார் என்று அல் மஸ்ரெம் சுட்டிக்காட்டினார்.

விமான போக்குவரத்து செய்தித் தொடர்பாளர் சாத் அல் ஒடாய்பி (Saad Al Otaibi) அல் ராயிடம் (Al Rai) அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும், 10 மாத இடை நிறுத்தத்திற்குப் பிறகு வீட்டுத் பணியாளர்களை மீண்டும் குவைத்துக்கு வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

80,000 வீட்டுப் பணியாளர்கள் குவைத்துக்குத் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நெரிசல் மற்றும் நீண்ட வரிசைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு நாளைக்கு 600 நபர்கள் என இது கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter