குவைத்திற்கு வெளியே சிக்கித் தவிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பட்டியலை MoH தயாரிப்பு..!!

MoH prepares the list of stranded expat workers
MoH prepares the list of stranded expat workers. (image credit : IIK)

குவைத்துக்கு வெளியே சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களின் சுகாதார துறையை சேர்ந்த மருத்துவ, தொழில்நுட்ப, நர்சிங் மற்றும் நிர்வாக ஊழியர்களின் பெயர்களின் பட்டியலை சுகாதார அமைச்சகம் தயாரித்துள்ளது என்று அல்-ஜரிடா செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

கடந்த மாதங்களில் கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக விடுமுறைக்கு பின்னர் திரும்பி வர முடியாத வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்த பட்டியலில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

இந்த ஊழியர்களை விரைவில் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான தயாரிப்பில் அமைச்சகம் இந்த பட்டியலை இன்று (ஆகஸ்ட் 26) சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு அனுப்பும் என்று தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத்திற்கு வெளியே சிக்கித் தவிக்கும் மருத்துவர்கள் திரும்பி வருவது தொடர்பான தொழில்நுட்ப விவகார அமைச்சகத்தால் பெறப்பட்ட மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 600 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

குவைத்தில் கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை கடைபிடிக்குமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms