குவைத்தில் தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் மரணம்..!!

An indian expat died in kuwait. (photo : Indian Express)

குவைத்தில் தமிழக மாநிலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், கல்லல் ஒன்றியம், சிராவயல் ஊராட்சி, கிளாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைச்சாமி (எ) குமார் (43) மற்றும் இவரின் தந்தை பெயர் ஆறுமுகம் ஆகும், இவர் குவைத்தில் வேலை செய்து வருகிறார்.

குவைத்தின் கிரீன்பீல்டு அக்ரிகல்ச்சர் நிறுவனத்தில் துரைசாமி பணிபுரிந்து வந்தார், 31-07-2020 அன்று அதிகாலை உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக குவைத் பர்வானியா மருத்துவமனையில் அவசர சிகிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் சில நாடுகள் சேர்ப்பு..!!

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி, 01- 08-2020 அன்று இரவு 9:30 மணிக்கு உயிரிழந்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறந்த துரைசாமி உடல் தாயகம் அனுப்பும் பணியை மனித உரிமை ஆணைய பிரதிநிதி ஆல்வின் ஜோஸ் அவர்களுடன் இணைந்து குவைத் செந்தமிழர் பாசறை அமைப்பு பிரதிநிதிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாயகத்தில் தமிழக அரசின் இலவச அவசர ஊர்தியின் உதவியுடன் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை; வேலையிழக்கும் ஆபத்து..!!

கொரோனா நோய்தொற்று காரணமாக குவைத்தில் மட்டும் அல்ல உலகெங்கிலும் உள்ள யாராக இருந்தாலும் எந்த நாட்டில் இறந்தாலும் அந்த நாட்டில் உடல் நல்லடக்கம் செய்வது உலக சுகாதார விதிமுறை ஆகும்.

இதையும் படிங்க : குவைத்தில் குழந்தை விசாவை அம்மாவின் ஸ்பான்சர்ஷிப்பிற்கு மாற்றுவதற்கு தடை..!!

இதுபோல் கொரோனா வைரஸ் காரணமாக குவைத்தில் இறந்தாலும்,குவைத் அரசாங்கத்தின் சொந்த செலவில் குவைத்லேயே நல்லடக்கம் செய்யப்படுவார்கள். கொரோனா அல்லாத காரணத்தால் உயிரிழந்தார் என்றால் உயிரிழந்தவர்கள் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms