குவைத்தில் ஓட்டுநர் உரிமங்கள் சேகரிக்கும் இடங்களில் மேலும் இரண்டு இடங்கள் சேர்ப்பு…!!

Two more locations to collect Driving license
Two more locations to collect Driving license. (image credit : IIK)

குவைத்தில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் ஓட்டுநர் உரிமங்களை சேகரிக்க பொது போக்குவரத்துத் துறை மேலும் இரண்டு புதிய இடங்களைச் சேர்த்து அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமங்களை பெரும் தானியங்கி இயந்திரங்கள் இப்போது கிடைக்கும் புதிய இடங்கள் ஜஹ்ரா பகுதியில் உள்ள சூக் ஷர்க் (Souq Sharq) மற்றும் அல் கைமா மால் (Al Khaima Mall) என்று பொது போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!

தற்போது, ​​குவைத்தில் இந்த இயந்திரங்கள் தி அவென்யூஸ், மெரினா மால் மற்றும் அல் கவுட் மாலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சென்று குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை சேகரிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!

உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஊடகங்கள் மற்றும் உறவுகளின் பொது நிர்வாகம், அல்-நஸ்ர் விளையாட்டுக் கழகத்திலிருந்து ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கான சேவைகள் ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms