குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!

Work permit renewal for those over 60 without graduation to be stopped in 2021
Work permit renewal for those over 60 without graduation to be stopped in 2021. (image credit : Times Kuwait)

குவைத் மனிதவளத்திற்கான பொது அதிகாரசபையின் இயக்குனர் ஜெனரல் அஹ்மத் அல்-மவுசா கூறுகையில், அறுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்களுக்கான பணி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதை நிறுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 60 வயது மற்றும் அதுற்கு மேல் உள்ளவர்கள் உயர்நிலைப் பள்ளி டிப்ளோமா அல்லது அதற்குக் கீழே உள்ள சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கும் வேலை அனுமதியை புதுப்பிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான திட்டத்தின் நான்காம் கட்டம் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!

இந்த முடிவு வரும் 2021 ஜனவரி 1 முதல் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அல் ராய் தினசரி செய்தி தெரிவித்துள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் சுமார் 83,562 வெளிநாட்டவர்கள் பல்கலைக்கழக பட்டங்கள் இல்லாமல் 60 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்று அல் கபாஸ் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயதடைந்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்கள் கவனத்திற்கு..!!

மேலும், அவர்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்: கல்வியறிவு இல்லாதவர்கள் 15,847, படிக்கவும் எழுதவும் கூடியவர்கள் சுமார் 24,000, தொடக்கக் கல்வி பெற்றவர்கள் 10,000, இடைநிலைப் பள்ளி அளவிலான டிப்ளோமா பெற்றவர்கள் 16,000, இடைநிலைக் கல்வி பட்டங்கள் 16,௦௦௦ என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து தமிழகம் வரவிற்கும் விமானங்களின் அட்டவனை வெளியீடு..!!

 

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms