குவைத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் நான்காம் கட்டம் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம்; தளர்வுகள் என்னென்ன..?

Some businesses allowed amid phase four, after the coronavirus infection numbers stabilized
Some businesses allowed amid phase four, after the coronavirus infection numbers stabilized. (image credit : Times Kuwait)

குவைத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தவுள்ளதாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் நான்காம் கட்டத்தில், கொரோனா தொற்று எண்ணிக்கையை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், சுகாதார அமைச்சகம் சில வணிகங்களை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான திட்டத்தின் நான்காம் கட்டம் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!

ஐந்தாம் கட்டத்தில் திறப்பதற்காக திட்டமிட்டுருந்த விளையாட்டு கிளப்புகள், ஜிம்கள், முடிதிருத்தும் கடைகள், அழகு நிலையங்கள், சுகாதார ரிசார்ட்ஸ் மற்றும் தையல் கடைகள் போன்றவற்றை நான்காம் கட்டத்திலேயே திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் செயல் துணை செயலாளர் அப்துல்ரஹ்மான் அல்-முத்தேரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயதடைந்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்கள் கவனத்திற்கு..!!

சுகாதார வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொது அமைப்புகள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வருகை தர அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து தமிழகம் வரவிற்கும் விமானங்களின் அட்டவனை வெளியீடு..!!

வாடிக்கையாளர்களை உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றில் அமரவும், சமூக தொலைதூர விதிகளுக்கு உட்பட்டு பொது போக்குவரத்தைப் பயன்படுத்தவும் இந்த இயல்பு நிலைக்கு திரும்பும் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் அனுமதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms