குவைத்தில் 60 வயதடைந்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்கள் கவனத்திற்கு..!!

Steps begin to control marginal workers above 60 years of age
Steps begin to control marginal workers above 60 years of age. (image credit : IIK)

குவைத்தில் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்களுக்கும் ஒரு வருடத்திற்கு மட்டுமே வேலை அனுமதி புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மக்கள் மற்றும் அவர்களது வீட்டுத் தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட 31 நாடுகளில் இருந்து குவைத் வர அனுமதி..!!

குவைத் மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்களுக்கும், பல்கலைக்கழக பட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே “வேலை அனுமதி” புதுப்பிக்கபடும் என்ற வாய்மொழி அறிவுறுத்தல்களைத் தொடங்கியுள்ளது என்று உள்ளூர் அரபு செய்தித்தாள் அல் கபாஸ் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் Al Tayer குழு நாளை முதல் இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவிப்பு..!!

மேலும், அடுத்த ஆண்டு முதல் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்களுக்கும், பல்கலைக்கழக பட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் குடியிருப்பானது புதுப்பிக்கப்படாது என்று மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை நாட்டில் ஓரளவு வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜஹ்ரா சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து..!!

ஏனெனில், புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 83,562 குடியிருப்பாளர்கள் 60 வயதை எட்டியுள்ளனர் மற்றும பல்கலைக்கழக பட்டங்கள் இல்லாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms