குவைத்தில் உள்ள மருத்துவமனை ICUவிற்குள் நுழைந்து கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது சகோதரரால் சுட்டுக் கொலை..!!

Pregnant woman shot dead by brother inside hospital ICU in kuwait
Pregnant woman shot dead by brother inside hospital ICU in kuwait. (Photo : Social Media)

குவைத்தில் திருமண தகராறு காரணமாக 35 வயது கர்ப்பிணி பாத்திமா அல் அஜ்மி என்ற குவைத் பெண் ஒருவர் தனது சகோதரரால் புதன்கிழமை (செப்டம்பர் 09) அன்று சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

பாத்திமா அல் அஜ்மியின் தந்தை மற்றும் பிற சகோதரர் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், அவரது கணவர் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் அவரது உடன்பிறப்புகளில் ஒருவர் மட்டும் அதற்கு எதிராக இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

மருத்துவமனையின் நுழைவாயிலில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர், ஆனால் அவரது சகோதரர் ஒரு கதவு வழியாகவும், ICUவிலும் நுழைந்து தனது சகோதரியை சுட்டுக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் அஜ்மி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர், அவர் தனது சகோதரரால் பல முறை வீட்டில் அச்சுறுத்தப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

இந்த கொலை சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், பலரும் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு குரல்குடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வன்முறை வரைவுச் சட்டத்திற்கு தேசிய சட்டமன்றம் ஒப்புதல் அளித்து பெண்களின் உரிமைகளுக்கான வரலாற்று வெற்றியைப் பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook

? Twitter