குவைத் சிவில் தகவல் போது ஆணையம், தங்களின் சிவில் ஐடி கார்டுகளை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டது.
மேலும், 220,000 சிவில் ஐடி கார்டுகளை 55 இயந்திரங்களில், அதாவது South surra மற்றும் jahra பகுதியில் உள்ள கிளைகளில் பெற முடியும் என்று அல் ராய் தினசரி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான திட்டத்தின் நான்காம் கட்டம் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!
சிவில் தகவல் பொது ஆணையத்தின் (PACI) உற்பத்தி மற்றும் விநியோகத் துறை இயக்குனர் ஜாசிம் அல் மாதன் கூறுகையில், ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 12 புதன்கிழமை வரை 27 வேலை நாட்களில் 220,000 சிவில் அடையாள அட்டைகளை ஆணையம் வெளியிட்டுள்ளது என்றும், அதில் 130,000 சிவில் கார்டுகள் 55 இயந்திரங்கள் மூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : குவைத்தில் 60 வயதடைந்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்கள் கவனத்திற்கு..!!

இதையும் படிங்க : குவைத்திலிருந்து தமிழகம் வரவிற்கும் விமானங்களின் அட்டவனை வெளியீடு..!!
மேலும், அல்-ஜஹ்ரா கிளையில் 15 இயந்திரங்களும், South surra பகுதியின் தலைமையகத்தில் 40 இயந்திரங்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் ஐடியை பெறுவதற்காக வருபவர்கள் 1889988 என்ற எண்ணிற்கு கால் செய்து, தங்களின் சிவில் ஐடி தயார் நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுமாறு சிவில் தகவல் பொது ஆணையத்தின் (PACI) உற்பத்தி மற்றும் விநியோகத் துறை இயக்குனர் ஜாசிம் அல் மாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms