குவைத்தில் 59 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே வேலை அனுமதி புதுப்பிக்கப்படும்..!!

Only one-year renewal for expats above 59 years old
Only one-year renewal for expats above 59 years old. (image credit : IIK)

குவைத்தில் பல்கலைக்கழக பட்டப்படிப்பு இல்லாமல் 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது என்று முன்னதாக அறிவிக்கப்பட்டுருந்தது.

தற்போது, மனிதவள பொது ஆணையம் 59 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பணி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருடம் வரை புதுப்பிக்க அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

முந்தைய முடிவின்படி, பல்கலைக்கழக பட்டம் இல்லாத வெளிநாட்டவர்கள் 60 வயதிற்குப் பிறகு தங்கள் பணி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுருந்தது.

மேலும், இந்த முடிவு 2021 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தேதிக்கு முன்னர் பணி அனுமதி காலாவதியாகும் எந்தவொரு வெளிநாட்டினருக்கும் அதிகபட்சம் ஒரு வருடம் மட்டுமே புதுப்பிக்கப்படும் எனவும், எனவே அடுத்த ஆண்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

முன்னதாக, குவைத் சிவில் தகவலுக்கான பொது ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி, 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை எட்டிய 97,612 வெளிநாட்டவர்கள் குவைத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms