குவைத் மனிதவளத்தின் பொது ஆணையம் விசா சம்மந்தமாக மற்றொரு அறிவிப்பு வெளியீடு..!!

No dependent visa for expats above 18, unless pursuing further studies
No dependent visa for expats above 18, unless pursuing further studies. (image credit : Arab Times)

குவைத் மனிதவளத்தின் பொது ஆணையம் விசா சம்மந்தமாக மற்றொரு முடிவை வெளியிட்டுள்ளது, இது புள்ளிவிவரங்களின் ஏற்றத்தாழ்வை மாற்றி தொழிலாளர் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவு எண் 22ன் படி, பேமிலி விசிட் விசாவில் உள்ள வெளிநாட்டினருக்கு பணி அனுமதி வழங்குவதை தடை செய்வதற்கான முடிவை மனிதவள பொது ஆணையம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் குவைத் அமீரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்..!!

மேலும், 18 வயதை தாண்டியவர்கள் தங்களது படிப்பை முடித்தவர்கள் குவைத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலதிக படிப்பைத் தொடர்பவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள புள்ளிவிவரங்களை மாற்றியமைக்கும் விதமாக மனிதவள ஆணையம் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த முடிவை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து 311 இந்தியர்களுடன் சென்னை வந்தடைந்தது குவைத் ஏர்வேஸ் விமானம்..!!

முன்னதாக, கடந்த காலங்களில் 21 வயது வரையிலான நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, ஆனால் இப்போது வயது 18 வயதாகக் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் 18 வயதடைந்த படிப்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மற்றவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும், குறிப்பாக எந்த பள்ளி அல்லது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்த்தவர்கள் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 31 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms