குவைத்தில் அரை மில்லியன் குவைத் தினார்கள் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!!

Narcotics substance worth half a million Kuwaiti dinars seized
Narcotics substance worth half a million Kuwaiti dinars seized. (image credit : IIK)

குவைத் உள்துறை அமைச்சகம் நேற்று (ஆகஸ்ட் 24) திங்களன்று, சுமார் 12 கிலோகிராம் எடையுள்ள ஒரு பெரிய அளவிலான போதை பொருளைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றியுள்ள இந்த போதை பொருட்களின் மதிப்பு அரை மில்லியன் குவைத் தினார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

இது குறித்து அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறுகையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான பொது நிர்வாகமும், சுங்கத் தேடல் மற்றும் புலனாய்வுத் துறையின் ஒருங்கிணைப்பும் இணைந்து, நாட்டிற்கு வெளியில் இருந்து ஒரு நபர் கொண்டு வந்த இரண்டு கண்டைனர்களை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில் ஒரு பெரிய அளவிலான போதை பொருளை தீவனத்திற்காக நியமிக்கப்பட்ட பைகளுக்குள் மறைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

அவர் தனது வாகனத்தில் கால் கிலோகிராம் போதை ரசாயனத்துடன் பொருள்களை விற்பனை செய்யும் போது போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த நபரை தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க அந்த நபர் அதற்குரிய அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms