குவைத் சுகாதார அமைச்சக கட்டிடத்தில் தீ விபத்து..!!

moh building fire
Photo Credit : KTP

குவைத் சுகாதார அமைச்சக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டிடத்தில் உள்ள மருந்துகள் கொள்முதல் துறையின் கோப்புகள் பாதுகாக்கப்படும் அறையில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

வேலை நேரம் தொடங்குவதற்கு முன்பே அந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் டாக்டர் பசில் அல்-சபா மற்றும் துணை செயலாளர் டாக்டர் முஸ்தபா ரெடா இருவரும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த தீ விபத்து மின்கசிவினால் ஏற்பட்டது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தீ விபத்தில் அமைச்சகத்தின் முக்கியமான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் எரித்ததாக போன்ற தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இது குறித்த கூடுதல் தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter