குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

Kuwait Maids Abuse
Photo Credit : Timeskuwait

குவைத்தில் உள்ள வீட்டுப் பணிப்பெண்களை கொரோனா காலகட்டத்தில் மோசமான முறையில் நடத்துவதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

பிலிப்பைனைச் சேர்ந்த 25 வயதான கிறிஸ்டினா குவைத்தில் வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

கொரோனா காலகட்டத்தில் முதலாளிகள் தன்னை அதிகமாக வேலை வாங்குகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் வேலை நேரத்தையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

இந்த வேலையிலிருந்து கிறிஸ்டினா எப்படியாவது வெளியேற வேண்டும் என்று நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, பிலிப்பைனைச் சேர்ந்த 39 வயதான மரியன்னே ஒரு வருடமாக குவைத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார்.

மரியன்னேவுக்கு கொரோனா காலகட்டத்தில் வீட்டு வேலையின் சுமைகள் அதிகரித்துள்ளது.

காலை 6:30 மணி முதல் இரவு 12 மணி வரை ஓய்வில்லாமல் வேலை தருவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

மேலும், சில பணிப்பெண்கள் தவறான முறையில் நடத்தபடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கருத்துப்படி வளைகுடா நாடுகள், லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் வீட்டு பணிப்பெண்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter