இந்த டயர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் – குவைத் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் எச்சரிக்கை !!

405 used tires confiscated. (images credit : IIK)

குவைத்தின் அல் ஜஹ்ரா கவர்னரேட் பகுதியில் பயன்படுத்தப்பட்ட 405 டயர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத் தகவல் அமைச்சகத்திலிருந்து 23 வெளிநாட்டு ஊழியர்கள் பணிநீக்கம்..!!

மேலும், இந்த 405 டயர்களும் கைப்பற்றப்பட்டு அவை அனைத்தையும் சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட எண் 214/14-ன் படி, பயன்படுத்திய டயர்களை இறக்குமதி செய்வது மற்றும் அதனை விற்பனை செய்வது குவைத்தில் தடை விதிக்கப்பட்ட ஒன்றாகும்.

இதையும் படிங்க : குவைத்தில் 500 மது பாட்டில்களுடன் இந்தியர் ஒருவர் கைது..!!

இந்த சட்டத்தை மீறி பயன்படுத்திய டயர்களை இறக்குமதி செய்து விற்பனை செய்த கடையை வணிகக் கட்டுப்பாட்டு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : வெளிநாட்டவர்கள் குவைத் திரும்ப மூன்று கட்டங்களாக அனுமதிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை..!!

இந்த பயன்படுத்தப்பட்ட டயர்களை உபயோகித்தால் கோடைகாலத்தில் டயர்கள் வெடிக்கும் நிலை ஏற்படும் என்றும், மேலும் இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் இதுபோன்ற டயர்களை வாங்க வேண்டாம் என்று அதிகாரிகள் நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms