குவைத்தில் பகுதிநேர ஊரடங்கை நாடு முழுவதும் ரத்து செய்ய முடிவு; தேதி அறிவிப்பு..!!

Kuwait to lift partial curfew
Kuwait to lift partial curfew. (image credit : IIK)

குவைத்தில் தற்போது அமலில் உள்ள பகுதி நேர ஊரடங்கை ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 3:00 மணி முதல் குவைத்தின் அனைத்து பகுதிகளிலும் ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் திட்டத்தின் நான்காம் கட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது, இதில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுருந்து.

இதையும் படிங்க : அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் குவைத் அமீரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்..!!

மேலும், குறிப்பாக இந்த தினத்தின் ஐந்தாம் கட்டத்தில் அமலுக்கு வரவிருந்த சில வணிக நடவடிக்கைகள் நான்காம் கட்டத்திலேயே நடைமுறைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுருந்தது.

இந்நிலையில், இயல்பு நிலைக்கு திரும்பும் இந்த திட்டத்தின், மூன்றாம் கட்டத்திலிருந்து நான்காம் கட்டத்திற்கு மாறுவதற்கு அமைச்சவரை கவுன்சில் ஒப்புதல் அளித்தபோது பகுதிநேர ஊரடங்கை இந்த கட்டத்தில் ரத்து செய்யப்படும் என்று பெரிது எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது, பகுதிநேர ஊரடங்கு , இரவு 9:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை பகுதி நேர ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து 311 இந்தியர்களுடன் சென்னை வந்தடைந்தது குவைத் ஏர்வேஸ் விமானம்..!!

தனியார் வீடுகள் உட்பட பொது அல்லது தனியார் இடங்களில் திருமண விருந்துகளை நடத்துவதை தொடர்ந்து தடை செய்ய அமைச்சர்கள் சபை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர்கள் சபை தொடர்ந்து விருந்துகள், வரவேற்புகள் மற்றும் இறுதி சடங்குகளை நடத்துவதை தடை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 31 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms