வெளிநாட்டில் சிக்கியுள்ள 54 சதவீத ஆசிரியர்களின் தேவை இல்லை – கல்வி அமைச்சகம்!

Kuwait teachers stuck abroad
54% of teachers stuck abroad are not needed (Photo: AP)

வெளிநாடுகளை சேர்ந்த ஆசிரியர்களில் 54 சதவீதம் பேர் வெளிநாட்டில் சிக்கியுள்ளனர் என்று கல்வி அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் குவைத்தில் வசிக்கும் காலம் காலாவதியானதாகவும், இனி அவர்களின் தேவை இருக்காது என்றும் Al Qabas தெரிவித்துள்ளது.

குவைத்தில் பாதுகாப்பு விதிகளை மீறிய 32 கிடங்குகள் மூடல்!

அவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய ஆய்வுகள், கலை, கணினி அறிவியல் மற்றும் இசை ஆகியவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆவார்கள்.

வெளிநாட்டில் சிக்கியுள்ள 693 ஆசிரியர்களில், 321 பேர் தேவைப்படுவதாகவும், எனவே அவர்களின் Residency புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அறிவியல் அடிப்படையிலான சிறப்பு ஆசிரியர்கள், முக்கியமாக ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழி ஆசிரியர்கள் அமைச்சுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் பல பாடங்களில் தேவைப்படுகிறார்கள்.

கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்பட்டு பணியமர்த்தப்பட்ட பொதுத்துறைக்குள் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த அறிக்கை பொருந்தும்.

தடுப்பூசிகளை தேர்வு செய்ய பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – குவைத்

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter