தடுப்பூசிகளை தேர்வு செய்ய பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – குவைத்

Kuwait vaccines No choosing
No choosing between vaccines, health officials say (Getty Image)

குவைத் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, Pfizer-BioNTech தடுப்பூசியை போட தொடங்கியுள்ளது.

ஆனால், Oxford-Astrazeneca தடுப்பூசிக்காக காத்திருக்கும் பலர் அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் தாமதிப்பதாக அல் ராய் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருந்தாளர் கைது

அல் ராய் கூறுகையில், நாட்டில் கிடைக்கக்கூடிய தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும், தடுப்பூசிகளை தேர்வு செய்ய பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.

Oxford தடுப்பூசி மருந்துகள் இன்னும் குவைத்துக்கு வரவில்லை, ஆனால் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்துவதற்கு உரிமம் வழங்க சுகாதார அமைச்சகம் தயாராகி வருவதாக சுகாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அவர்கள் ஒப்புதல் அளித்தவுடன் குவைத் 3 மில்லியன் அளவிலான மருந்துகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவை தொகுதி தொகுதியாக வந்து சேரும்.

Pfizer தடுப்பூசியை விட Oxford தடுப்பூசி பாதுகாப்பானது என்ற கூற்று அதிகமானோரிடையே காணப்படுகிறது.

குவைத்தில் புதிதாக எண்ணெய் வளங்கள் கண்டுபிடிப்பு!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter