ரோஹிங்கியா அகதிகளுக்கு $5 மில்லியன் டாலர்கள் குவைத் நிவாரணம் வழங்கல்..!!

Kuwait Rohinya Refugee
Foreign Minister Sheikh Dr Ahmad Nasser Al-Mohammad Al-Sabah. (Photo credit : Q8india)

ரோஹிங்கியா அகதிகளின் நிவாரண முயற்சிக்கு குவைத் ஐந்து மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிவாரணத்தொகையை (அக்டோபர் 22) வியாழக்கிழமை நடைபெற்ற உலகளாவிய நன்கொடையாளர் பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சர் ஷேக் டாக்டர். அஹ்மத் நாசர் அல் முஹம்மத் அல் சபா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சவுதி அரேபியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளதாக குவைத் ஏர்வேஸ் அறிவிப்பு..!!

இதனை தொடர்ந்து, பங்களாதேஷில் உள்ள முகாம்களில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்காக 62.2 மில்லியன் டாலர்கள் புதிய நிதியுதவிகளை மாநாட்டின் போது பிரிட்டன் அறிவித்துள்ளது.

மேலும், பங்களாதேஷில் உள்ள 8,60,000 ரோஹிங்கியா அகதிகளின் துன்பத்தை குறைக்க இந்த புதிய உதவி வழங்கப்பட்டுள்ளது என்று பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவி அகதிகளின் முகாம்களுக்கு உணவு, நீர், கல்வி மற்றும் சுகாதாரம் வழங்க பயன்படுத்தப்படும் என்று டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

கொரோனா நோய்த்தொற்று மற்றும் அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரழிவுகளை சமாளிக்க இவ்வுதவி பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரோஹிங்கியா அகதிகளின் அவல நிலையை மறந்துவிட வேண்டாம் என்றும், துன்பங்கள் போது விலகிச் செல்ல வேண்டாம் என்றும் டொமினிக் ராப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter