குவைத்தில் புதிதாக எண்ணெய் வளங்கள் கண்டுபிடிப்பு!

Kuwait oil fields discovered
Kuwait oil fields discovered (PHOTO: Arabian business)

குவைத் கடந்த திங்களன்று இரண்டு புதிய எண்ணெய் வளங்களை கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளது.

புதிய எண்ணெய் வளங்கள் குவைத்தில் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானது என்று விவரிக்கப்படுகிறது.

குவைத்தில் இருந்து நேற்று மட்டும் 300க்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பினர்!

இந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று வடமேற்கு குவைத்தில் உள்ள Houma எண்ணெய் வயலில் உள்ளது.

இது ஒரு நாளைக்கு சுமார் 1,452 பீப்பாய்கள் (bpd) எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

இதனை குவைத்தின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் முகமது அல்-ஃபரிஸ் தெரிவித்தார்.

இரண்டாவது, நாட்டின் வடக்கில் உள்ள Al-Qashaniya வயலில் உள்ளது, அங்கு சுமார் 1,819 bpd வணிக அளவுடன் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதாக KUNA தெரிவித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள் நாட்டிற்கு பெரும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

குவைத் வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாய PCR சோதனை

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter